தமிழ் சங்கம்

தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 08.01.2025 அன்று 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றிய பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று, வீரர்களின் தியாகங்களையும் நாட்டுக்கான ஆர்வத்தையும் ஆற்றலுடன் விவரித்தனர். சிறப்பாகப் பேசிய மாணவர்கள் சான்றிதழ்களால் பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வு மாணவர்களின் பேச்சுத் திறனையும் நாட்டுப்பற்று மற்றும் தமிழ் பற்றையும் வளர்க்கும் விதமாக அமைந்தது.